காஸா சென்ற நிவாரண கப்பல்கள் சிறைப்பிடிப்பு.
காஸா பகுதியிற்கு மனிதாபிமான உதவிகளை கொண்டு சென்ற...
Published October 2, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
காஸா பகுதியிற்கு மனிதாபிமான உதவிகளை கொண்டு சென்ற குளோபல் பீஸ் ஃப்ளோட்டிலா இயக்கத்தின் 13 கப்பல்களை, இஸ்ரேலியப் படைகள் கடலில் தடுத்து வைத்து பறிமுதல் செய்துள்ளன.
37 நாடுகளைச் சேர்ந்த 200 மேற்பட்டோர் இதில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஸ்வீடிஷ் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஸ்பெயின் – 30 பேர், இத்தாலி – 22 பேர், துருக்கி – 21 பேர், மலேசியா – 12 பேர் என்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், மீதமுள்ள 30 கப்பல்கள் காஸா நோக்கி பயணத்தைத் தொடரும் என அமைப்பாளர்கள் உறுதி தெரிவித்துள்ளார்.