பலத்த மின்னல் தாக்கங்கள் குறித்து எச்சரிக்கை.
நாட்டில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த...
Published October 4, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நாட்டில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், குருநாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களில் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல் தாக்கங்கள் அதிகரித்து காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இன்று (04) இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் வகையில் பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுத்து வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மின்னல் அபாயத்தை குறைத்துக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மக்கள் மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.