முதல் டெஸ்ட்டில் இந்திய அணி அபார வெற்றி.
இந்திய - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதல்...
இந்திய – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நரேந்திர மோடி மைதானத்தில் அக்டோபர் 2 ஆம் திகதி தொடங்கியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்து.162 ரன்களுக்கு சகலவிக்கெட்டுக்களையும் இழந்தது.
– அதிகபட்சமாக அவ் அணி சார்பில், ஜஸ்டின் கிரீவ்ஸ் 32 ரன்களை அடித்தார்.
– இந்திய அணி பந்துவீச்சில், சிராஜ் 4, பும்ரா 3 விக்கெட்டை வீழ்த்தினார்கள்.
தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 448 ஓட்டங்களை பெற்று டிக்ளர் செய்தது.
இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில்,
– கேஎல் ராகுல் (100), துருவ் ஜுரேல் (125), ஜடேஜா (104*), கில் (50) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை நிகழ்த்தினர்.
மூன்றாம் நாளின் இன்று காலை தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணி 146 ரன்கள் மட்டுமே எடுத்து இன்னிங்ஸ் மற்றும் 140 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. மேற்கிந்தியத்தீவுகள் அணியின் துடுப்பாட்டத்தில் எந்த வீரரும் சோபிக்காத நிலையில்,
– இந்திய அணியின் அதிரடியான பந்துவீச்சில், ஜடேஜா (4), சிராஜ் (3), குல்தீப் (2), வாஷிங்டன் சுந்தர் (1) விக்கெட்களை வீழ்த்தினார்கள்.
மேலும், துடுப்பாட்டம்,மற்றும் பந்துவீச்சில் பிரகாசித்த நட்சத்திர நாயகன் ஜடேஜா ஆட்ட நாயகனாக தெரிவுச்செய்யப்பட்டார்.