இஸ்ரேல் – ஹமாஸ் போர் இரண்டு ஆண்டுகள் நிறைவு.
இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கி இன்று (அக்டோபர் 7) இரண்டு...
Published October 7, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கி இன்று (அக்டோபர் 7) இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், சுக்கோத் பண்டிகையையொட்டி இஸ்ரேலின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு குவிக்கப்பட்டுள்ளது.
போரின் போது ஈரான் உள்ளிட்ட 5 நாடுகளை இஸ்ரேல் தாக்கியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இஸ்ரேல் PM நெதன்யாகுவுக்கு சர்வதேச நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
காஸாவுக்கு நிவாரண உதவி தடைப்பட்டதால், அங்கு குழந்தைகள் உணவுப்பஞ்சம், ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழந்து வருகின்றனர்.
இந்தப் போருக்கு முடிவுகொடுக்க, ட்ரம்ப் 20 முக்கிய அம்சங்கள், நிபந்தனைகள் அடங்கிய அமைதித் திட்டத்தை முன்மொழிந்துள்ளார். இதையடுத்து, பேச்சுவார்த்தை எகிப்தின் ஷர்ம்எல் – ஷெயிக்கில் ஆரம்பமாகியுள்ளது.