“மலையகம் மகிழ்ச்சி” – காணிவீட்டுரிமை 12 ஆம் திகதி வழங்கப்படும். #Video
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது...
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது பெருந்தோட்டத்துறை அமைச்சர், பிரதி அமைச்சர் ஆகியோர் பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
மலையக மக்களுக்கான இந்தியாவின் 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தின் 4 ஆம் கட்டமாக 4 ஆயிரத்து 700 வீடுகளை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இதன் ஆரம்பக்கட்டமாக 2 ஆயிரத்து 56 பயனாளிகளுக்கு வீடுகள் அமைக்கப்படுகின்றன. இதற்குரிய வீட்டு உரித்து கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் 12 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் பண்டாரவளையில் நடைபெறுகின்றது இந் நிகழ்வில் இந்திய தூதரக அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர்.
பதுளை, கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, மாத்தளை, காலி, மாத்தறை, மொனறாகலை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இருந்தே பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். அதிக மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
மலையக மக்களுக்கு 10 பேர்ச்சஸ் காணி வழங்கப்படும். மலையக மக்களுக்கு தனி வீடுகளே இத் திட்டத்தின் மூலம் அமைக்கப்படும். இதன் ஆரம்பக்கட்டமாக ஏற்கனவே வீடுகளைப் பெற்றவர்களுக்கு காணி வழங்கும் நிகழ்வும் 12 ஆம் திகதி பண்டாரவளையில் நடைபெறவுள்ளது.
மேலும், விரைவில் மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு எதிர்பார்க்கின்றோம்.
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு வரவு – செலவுத் திட்டத்துக்கு முன்னர் தீர்வொன்றை காண்பதற்கு எதிர்பார்க்கின்றோம். எனத் தெரிவித்துள்ளார்கள்.