லக்ஸபான தேயிலை தொழிற்சாலையில் நள்ளிரவு தீவிபத்து !
மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும்
மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் நல்லதண்ணி லக்ஸபான தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலையில் நள்ளிரவு இடம்பெற்ற தீ விபத்தினால் அத் தொழிற்சாலைக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த தேயிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தின் காரணமாக தொழிற்சாலைக்கும் அதன் உடமைகளுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன் பெருந்தொகையான தேயிலை அழிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தேயிலை தூள் உற்பத்திப் பகுதியில் ஏற்பட்ட தீ, தேயிலை கொழுந்து சேமிக்கப்பட்டிருந்த சேமிப்பு அறைக்கு பரவி, பொதி செய்யப்பட்டு முடிக்கப்பட்டிருந்த தேயிலை தூளுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பரவத் தொடங்கிய தீ, தேயிலை தொழிற்சாலையின் ஏனைய பகுதிகளுக்கு பரவாமல் தோட்டத் தொழிலாளர்களால் கட்டுப்படுத்தப்பட்டது.
தீ விபத்தால் ஏற்பட்ட சேதம் இன்னும் மதிப்பிடப்படவில்லை, மேலும் தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தேயிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தீ விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. தீ விபத்து குறித்து நல்லதண்ணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.