ஒழுக்கமான சமூகத்துக்கு புதிய பாடத்திட்டம்.

நாட்டு மாணவர்களுக்கு சட்டக் கல்வி தொடர்பான கல்வியை...

Published October 11, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

நாட்டு மாணவர்களுக்கு சட்டக் கல்வி தொடர்பான கல்வியை இணைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

தரம் 6 முதல் 8 வரையான குடியுரிமை பாடத்திட்டத்தில், சட்டக் கல்வி தொடர்பான பகுதிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒழுக்கமான சமூகத்திற்கான சட்ட விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும். என பிரதமர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 6ஆம் தரத்தின் மூன்றாம் தவணைப் பாடத்திட்டத்தில் ஏற்கனவே சட்டக் கல்வி தொகுதி சேர்க்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் சாதாரண தரத்திலும் தெரிவுப் பாடமாக சட்டம் சேர்க்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *