இலங்கை அணியை வீழ்த்தி இங்கிலாந்து மகளிர் அணி வெற்றி.
மகளிர் உலக கிண்ண தொடரில் நேற்றைய 12வது லீக் போட்டியில்...
மகளிர் உலக கிண்ண தொடரில் நேற்றைய 12வது லீக் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக இங்கிலாந்து மகளிர் அணி 89 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இந்நிலையில், முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 253 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
> இங்கிலாந்து மகளிர் அணி சார்பில்,
– அணித் தலைவி Nat Sciver-Brun அதிகபட்சமாக 117 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
254 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை மகளிர் அணி 45.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 164 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.
> இலங்கை அணி சார்பில்,
– ஹசினி பெரேரா மாத்திரமே 35 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.