பதவிகளை இராஜினாமா செய்யும் ஐ.ம.ச பாராளுமன்ற உறுப்பினர்கள் !
ஐக்கிய மக்கள் சக்தியின் சில தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள்...
ஐக்கிய மக்கள் சக்தியின் சில தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்யத் தயாராக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஐ.ம.ச. தலைமை செயலகத்தில் நடைபெற்ற டி.எஸ். சேனநாயக்க அரசியல் கற்கைகள் பீடத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதேவேளை, ஆளும் தரப்பில் இதுபோன்ற நிலைமைகள் ஏற்பட்டுள்ளதை மேற்கோள் காட்டிய அவர், எதிர்க்கட்சியில் இருந்து இவ்வாறு நடப்பது அரிதான விடயமென்றும் கூறினார்.
2020 பதிவு செய்யப்பட்ட ஐ.ம.ச. தற்போது 1773 உள்ளூராட்சி உறுப்பினர்களை கொண்டுள்ளது. இவர்களில் 714 பேர் பெண்கள் எனவும், கட்சி தோற்றம் முதல் அவர்கள் செய்த தியாகங்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.