பிரான்ஸ் தூதுவர் – டில்வின் சில்வா சந்திப்பு.

பிரான்ஸ் தூதுவர் ரெமி லெம்பர்ட் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின்...

Published October 13, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 3 min read

பிரான்ஸ் தூதுவர் ரெமி லெம்பர்ட் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இடையிலான சந்திப்பு இன்று (13) பெலவத்தை, பத்தரமுல்ல தலைமையகத்தில் இடம்பெற்றது.

இச் சந்திப்பில், பிரான்ஸ் – இலங்கை இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகள், தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஒழுங்குபடுத்தப்பட்ட திட்டங்கள், வன்முறை இல்லாத அரசியல் மாற்றம், மற்றும் ஊழல் தடுப்பு முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

திசைகாட்டி அரசாங்கம் அதிகாரத்தை கைப்பற்றி ஒரு வருடம் என்ற குறுகிய காலப்பகுதிக்குள் இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் தனது வாழ்த்துக்களை தூதுவர் தெரிவித்துள்ளார்.

பெண்கள் உரிமை, கடல் வள பாதுகாப்பு, முதலீட்டு ஊக்குவிப்பு போன்ற துறைகளில் ஒத்துழைப்பு வழங்க பிரான்ஸ் தயாராக இருப்பதாக பிரான்ஸ் தூதுவர் தெரிவித்தார்.

மேலும், பிரான்ஸ் – இலங்கைக்கு இடையில் நிலவுகின்ற நீண்டகால நட்புறவை மேலும் மேம்படுத்தி தொடர்ந்து பேணுவதற்கும், பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகளில் பிரான்ஸின் முதல் வரிசை முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஊக்குவிப்பதற்கும் இதன்போது உடன்பாடு எட்டப்பட்டது.

அதேவேளை, எதிர்காலத்தில் இலங்கை அரசுத் தலைவர்களைப் பிரான்ஸில் வரவேற்கும் ஆர்வமும், தெளிவான, திறந்த தொடர்புகளுக்கான உறுதியும் உள்ளதாக தூதுவர் ரெமி லெம்பர்ட் வலியுறுத்தினார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *