களுவாஞ்சிகுடியில் பாரிய விபத்து.
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட் பட்ட குருக்கள்மடம் பகுதியில் கார்...
Published October 14, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட் பட்ட குருக்கள்மடம் பகுதியில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு விலகி மதகுடன் மோதி பள்ளத்தில் விழுந்து செவ்வாய்கிழமை (14.10.2025) காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொழும்பிலிருந்து சம்மாந்துறை நோக்கி பயணித்த கார் குருக்கள்மடம் முருகன் ஆயத்திற்கு முன்னால் விபத்துக்குள்ளகியுள்ளது. காரில் மூன்றுபேர் பயணித்துள்ள நிலையில் அவர்கள் காயங்களுக்குள்ளாகி உயர் சேதம் ஏற்படாமல் தெய்வாதினமாக உயிர் தப்பி கலுவாஞ்சி குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.