எந்த தீர்மானத்தை கண்டும் அஞ்சப்போவது இல்லை

எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்படும் எந்தவொரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை கண்டும் அரசாங்கம் அஞ்ச போவதில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.  பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதி்ராக

Published October 14, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 3 min read

எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்படும் எந்தவொரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை கண்டும் அரசாங்கம் அஞ்ச போவதில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதி்ராக எதிர்கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபாநாயகர் நிராகரித்திருந்தார். 

இந்நிலையில் மீண்டும் ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர எதிர்க்கட்சிகள் நடவடிக்கை எடுத்து வருவது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைபாடு என்னவென்பது குறித்து அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது. 

இதற்கு பதில் வழங்கிய அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளதாவது, 

தாம் கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியுறுவோம் என அவர்கள் அறிந்திருந்தாலும் அவ்வாறு எதையாவது எதிர்க்கட்சிகள் முன்னெடுக்க வேண்டும். 

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அரசாங்கம் அச்சமடையாது. 

இருப்பினும் கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை உரிய முறையில் கொண்டு வர வேண்டும். 

பாராளுமன்றம் சம்பிரதாயம், சட்டம் மற்றும் நிலையியற் கட்டளையின் அடிப்படையிலேயே செயற்படும். 

எனவே சில சந்தர்ப்பங்களில் சபாநாயகரினால் எடுக்கப்படக்கூடிய தீர்மானங்கள் வரலாற்று சட்டம், நிலையியற் கட்டளையாக மாறும் நிலை உள்ளது. 

ஆகவே அதனை உரிய முறையில் முன்வைத்தால் எவ்வித பிரச்சினையும் இல்லை என்பதுடன் அதற்கான விவாதத்திற்கான தினத்தையும் வழங்க முடியும் என அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *