இஷாரா செவ்வந்தி நாட்டிற்கு அழைத்துவரப்பட்டார்.
பாதாள உலகக் குழு உறுப்பினரான கணேமுல்ல...
பாதாள உலகக் குழு உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ எனும் சஞ்சீவ குமார சமரரத்ன கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபராகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து இலங்கையர்கள், நேபாளத்தில் கைது செய்யப்பட்டு நேற்று மாலை UL 182 விமானம் மூலம் கட்டுநாயக்கவுக்கு அழைத்துவரப்பட்டனர்.
விசேட அதிரடிப்படை அதிகாரிகள் நேபாள CID – யுடன் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
நேபாளத்தின் காத்மண்டுவில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தபோது, நேபாள பாதுகாப்புப் படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையில் இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டார். இஷாரா செவ்வந்தியுடன் மற்றொரு பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், இஷாரா செவ்வந்தி தற்போது கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.