அதிக விலை குடிநீர் போத்தல்கள் – விசேட சுற்றிவளைப்பில் சிக்கிய வர்த்தகர்கள்.
நாட்டில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு...
Published October 16, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நாட்டில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் சுமார் 306 சுற்றிவளைப்புக்கள் நடத்தப்பட்ட நிலையில், பெரும்பாலானவை கொழும்பு மாவட்டத்தை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டன. ஏப்ரல் 1ஆம் திகதி – செப்டெம்பர் 30 ஆம் திகதி வரையில் இதுவரை 25 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
எதிர்காலத்திலும் இந்த சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.