தனிநபர் தரவு பாதுகாப்பு திருத்தச் சட்டம் – அடுத்த வாரம் பாராளுமன்றில்.
தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்திற்கான திருத்தங்கள் அடங்கிய...
Published October 17, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்திற்கான திருத்தங்கள் அடங்கிய திருத்தச் சட்டமூலம், அடுத்த வாரம் 2025 ஒக்டோபர் 21ஆம் திகதி, பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த திருத்தச் சட்டம், அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் கடந்த ஜூன் 3ஆம் திகதி இரண்டாவது வாசிப்பில் நிறைவேற்றப்பட்டது. அதன் பின், சட்டவரைஞர் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் இணைந்து, குழுநிலையில் சில சிறிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இம்முறை, விவாதமின்றி குழுநிலையின் போது திருத்தங்கள் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, அதே நாளில் மூன்றாவது வாசிப்பு முடித்து சட்டமாக நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.