நாட்டின் இன்று பலத்த மழை.

நாட்டின் இன்று பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும்...

Published October 19, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

நாட்டின் இன்று பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக அளவில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய , மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடும்.

அத்துடன் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *