LATEST
உயிர்த்த ஞாயி வழக்கில் முக்கிய தீர்ப்பு வெளியானது!தங்கப் பதக்கத்துக்காக களமிறங்கும் இலங்கை–இந்தியா மகளிர் அணிகள்!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை – உயர் நீதிமன்றம்புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு!இலங்கைக்கு நேரடி தாக்கம் இல்லை – தென்மேற்கில் கனமழை தொடரும்!மத்திய மாகாணத்தில் 35 உட்பட 38 பாடசாலைகள் இன்று இயங்காது!கண்டி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு!அதிவேக நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து – பலர் காயம்!உயிர்த்த ஞாயி வழக்கில் முக்கிய தீர்ப்பு வெளியானது!தங்கப் பதக்கத்துக்காக களமிறங்கும் இலங்கை–இந்தியா மகளிர் அணிகள்!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை – உயர் நீதிமன்றம்புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு!இலங்கைக்கு நேரடி தாக்கம் இல்லை – தென்மேற்கில் கனமழை தொடரும்!மத்திய மாகாணத்தில் 35 உட்பட 38 பாடசாலைகள் இன்று இயங்காது!கண்டி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு!அதிவேக நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து – பலர் காயம்!
உள்ளூர்

வவுணதீவில் காட்டு யானை தாக்குதல் பெண் ஒருவர் உயிரிழப்பு!

October 20, 2025 · Tamil Ceylon LK

மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சேனை, வாதகல்மடு கிராமத்தில் வசித்து வந்த நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர், காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று அதிகாலை நேரத்தில் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.
அப்பெண் உறங்கிக் கொண்டிருந்தபோது வீட்டுக்குள் நெல்லை உண்பதற்காக நுழைந்த காட்டு யானையை கண்டு பயந்த அவர் வெளியே ஓடிச் சென்றபோது யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

மரணமடைந்தவர் 58 வயதுடைய வைரமுத்து மலர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பாக வவுணதீவு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தினால் யானை தாக்குதலுக்காக பத்து இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கப்படும் எனவும், முதற்கட்டமாக ஒரு இலட்சம் ரூபா இறந்தவரின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

மேலும் ›