பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
Published October 22, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்,
மு.ப. 09.30 – மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 – மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்.
மு.ப. 11.00 – மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்.
மு.ப. 11.30 – பி.ப. 4.30 (i) விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளை — அங்கீகரிக்கப்படவுள்ளது.
மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான விதிகள் (அத்தியாயம் 52) – அங்கீகரிக்கப்படவுள்ளது.
பி.ப. 4.30 – பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்).