கொழும்பில் நாளை நீர் வெட்டு !

கொழும்பில் நாளை (23) காலை 10 மணி முதல் 10 மணித்தியால நேரம் நீர் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட மின் தடை காரணமாக அதிலிருந்து நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு 01 – 15 வரையில், பத்தரமுல்ல, பெலவத்த, ஹோகந்தர, கொஸ்வத்த, தலவத்கொட, கோட்டை, ராஜகிரிய மற்றும் நாவல பகுதிகளிலும் நீர் விநியோகம் நிறுத்தப்படும் என நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக நாளை காலை 10 மணிமுதல் இரவு 8 மணி வரை மீரிஹான, மடிவெல, நுகேகொட, நாவல,கொலன்னாவ, ஐடிஎச்,கொட்டிகாவத்த, அங்கொட, வெல்லம்பிட்டி,ஒருகொடவத்த,மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் நிறுத்தப்படும் என நீர் வழங்கல் சபை அறிவித்துள்ளது.
Follow & Share




