இந்தியாவுக்கு 5% தள்ளுபடியில் மசகு எண்ணெய் வழங்க ரஷ்யா தயார்.
ரஷ்யா, இந்தியாவுக்கு வழங்கும் மசகு எண்ணெய்க்கு கூடுதலாக
ரஷ்யா – இந்தியாவுக்கு வழங்கும் மசகு எண்ணெய்க்கு கூடுதலாக 5 சதவீத தள்ளுபடி வழங்குவதாக தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
– இது தொடர்பில் ரஷ்ய தூதரக அதிகாரி ரோமன் பாபுஷ்கின் பேசுகையில்,
ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும்போது இந்தியா எதிர்கொள்ளும் சிரமங்களை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
வர்த்தகத்திற்கான தடைகளை நீக்குவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இந்தியா-ரஷ்யா இடையிலான வர்த்தகம் ஏழு மடங்கு அதிகரித்துள்ளது. இது ஆண்டுதோறும் 10 சதவீதம் வளரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று அவர் கூறினார்.
மேலும், அமெரிக்க சந்தையில் இந்திய பொருட்கள் விற்பனை செய்வதில் சிரமங்களை எதிர்கொண்டால், ரஷ்ய சந்தை இந்தியாவிற்கு எப்போதும் திறந்திருக்கும் என்று அவர் கூறினார்.
தற்போது, இந்தியாவின் எண்ணெய் தேவைகளில் சுமார் 35 சதவீதத்தை ரஷ்யா பூர்த்தி செய்கிறது. குறைந்த விலையில் எண்ணெய் கிடைப்பதால், கடந்த இரண்டு நிதியாண்டுகளில் இந்தியா சுமார் 13 பில்லியன் டொலர்களை சேமிக்க முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.