வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை.
வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த காற்று, பலத்த...
வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த காற்று, பலத்த மழை மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து இன்று (23) பிற்பகல் 1.00 மணிக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இவ் எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் பயணிக்கும் நெடுநாள் மீன்பிடி படகுகளுக்கு இந்த எச்சரிக்கை அமுலில் உள்ளது.

மேலே உள்ள வரைபடத்தில் ‘Advisory’ பிரிவின் கீழ் குறிக்கப்பட்ட கடல் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும், காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு 55 – 65 கிமீ வரை அதிகரிக்கும், கடல் பகுதிகள் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாகவோ மாறக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்கிழக்கு அரபிக் கடல் ஊடாக வடகிழக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.