ஆசிய கிண்ணத்தை வழங்குமாறு நக்விக்கு BCCI கடிதம்.
2025 ஆசிய கிண்ணத்தை வென்ற இந்திய அணிக்கு இன்னும்
2025 ஆசிய கிண்ணத்தை வென்ற இந்திய அணிக்கு இன்னும் அந்த சாம்பியன் கிண்ணம் வழங்கப்படவில்லை,
இதையடுத்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI), ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவர் மொஹ்சின் நக்விக்கு கடிதம் எழுதி, கிண்ணத்தை உடனடியாக கையளிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. ஆனால், பரிசளிப்பு நிகழ்வில் ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவர் மொஹ்சின் நக்வியிடமிருந்து கிண்ணம் பெற இந்திய அணி மறுத்தது, இந்நிலையில் ஆசிய கிண்ணம் தற்போது டுபாயில் உள்ள ஆசிய கிரிக்கெட் பேரவையின் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், BCCI செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்ததாவது, நக்வியிடம் இருந்து பதில் வராவிட்டால், இந்த விவகாரம் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு (ICC) எடுத்துச் செல்லப்படும் என கூறியுள்ளார்.