ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டி – இலங்கை வீரர்கள் சாதனை !
ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் பஹ்ரைனில்...
Published October 24, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் பஹ்ரைனில் நடைபெற்று வரும் நிலையில், நேற்று (23) நடைபெற்ற பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் நெத்மி கிம்ஹானி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
போட்டியை நிறைவு செய்ய அவர் 4 நிமிடங்கள் 52.32 வினாடிகளை எடுத்துக் கொண்டார்.
மேலும், இப் போட்டித் தொடரில் இலங்கை வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.
இதேவேளை, ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் லஹிரு அச்சின்த தங்கப் பதக்கத்தை வென்றார்.
போட்டியை நிறைவு செய்ய அவர் 3 நிமிடங்கள் 57.42 வினாடிகளை எடுத்துக் கொண்டார்.
ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளின் வரலாற்றில் ஓர் இலங்கையர் வென்ற முதல் தங்கப் பதக்கம் எது என்பது குறிப்பிடத்தக்கது.