LATEST
கனமழை மற்றும் பலத்த காற்று – பல பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கைகுற்றவாளிகளின் அசையும், அசையாச் சொத்துகளையும் அரசுடைமையாக்க உத்தரவு!உயிர்த்த ஞாயி வழக்கில் முக்கிய தீர்ப்பு வெளியானது!தங்கப் பதக்கத்துக்காக களமிறங்கும் இலங்கை–இந்தியா மகளிர் அணிகள்!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை – உயர் நீதிமன்றம்புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு!இலங்கைக்கு நேரடி தாக்கம் இல்லை – தென்மேற்கில் கனமழை தொடரும்!மத்திய மாகாணத்தில் 35 உட்பட 38 பாடசாலைகள் இன்று இயங்காது!கனமழை மற்றும் பலத்த காற்று – பல பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கைகுற்றவாளிகளின் அசையும், அசையாச் சொத்துகளையும் அரசுடைமையாக்க உத்தரவு!உயிர்த்த ஞாயி வழக்கில் முக்கிய தீர்ப்பு வெளியானது!தங்கப் பதக்கத்துக்காக களமிறங்கும் இலங்கை–இந்தியா மகளிர் அணிகள்!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை – உயர் நீதிமன்றம்புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு!இலங்கைக்கு நேரடி தாக்கம் இல்லை – தென்மேற்கில் கனமழை தொடரும்!மத்திய மாகாணத்தில் 35 உட்பட 38 பாடசாலைகள் இன்று இயங்காது!
உலகம்

கரூர் – பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்திக்கும் த.வெ.க தலைவர் விஜய்.

October 25, 2025 · Tamil Ceylon LK

தமிழ் நாடு – கரூரில் செப்டெம்பர் 27 த.வெ.க. பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை பனையூருக்கு வரவழைத்து சந்திக்க த.வெ.க. தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய உள்ளூர் த.வெ.க. நிர்வாகிகள், “கரூரில் மண்டபம் கிடைக்காததால் விஜய் வரமுடியவில்லை. இதனால், பனையூரில் உள்ள அலுவலகத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேருந்து வசதி செய்து கொடுத்தால் வருவீர்களா ?” என்று கேட்டறிந்தனர். எனினும், இதற்கான திகதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை த.வெ.க. தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறவில்லை என்று தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்தன. இதற்கிடையில், கடந்த 18 ஆம் திகதி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வங்கிக் கணக்கில் த.வெ.க சார்பில் தலா 20 லட்சம் இந்திய ரூபா வரவு வைக்கப்பட்டது.

Related Stories

மேலும் ›