தொடரும் தபால் ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பு.
நாட்டில் தபால் ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காணக் கோரி...
Published August 21, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
நாட்டில் தபால் ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காணக் கோரி இன்று (21) நான்காவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், நுவரெலியா பிரதான தபால் நிலையம் மூடப்பட்டிருந்தது. அங்கு ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்கவில்லை இதனால் இன்று (21) தபால் நிலைய வளாகம் பொது மக்களின் நடமாட்டம் அற்று வெறிச்சோடிக் காணப்படுகின்றது.
நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் தபால் தொழிற்சங்கங்கள் 17ஆம் திகதி நள்ளிரவு முதல்
19 கோரிக்கைகளை முன்வைத்து, வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில், தபால் ஊழியர்களின் இவ்வாறான பணிப்பகிஷ்கரிப்பின் காரணமாக தபால் மூலம் சேவைகளைப் பெறும் மக்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.