கடல்வளமும் – கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பதும் அரசின் முதன்மை நோக்கம்.

தெற்கில் கிரிந்த மீன்பிடி துறைமுகத்துக்கு கடற்றொழில், நீரியல்...

Published October 26, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

தெற்கில் கிரிந்த மீன்பிடி துறைமுகத்துக்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இன்று (26) கண்காணிப்பு பயணம் மேற்கொண்டார்.

அங்குள்ள துறைசார் அதிகாரிகள், கடற்றொழிலாளர்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

  • அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்,

கிரிந்த துறைமுகத்தில் மணல் குவிவதால் கடற்றொழிலாளர்கள் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர் என அமைச்சரிடம் ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டிருந்த நிலையில், மணலை அகற்றி, துறைமுகத்தை நவீன மயப்படுத்துவதற்குரிய உத்தரவை அமைச்சர் ஏற்கனவே பிறப்பித்திருந்தார்.

இதற்குரிய நடவடிக்கை அடுத்த வாரம் ஆரம்பமாகும் என அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

மீன்பிடி துறைமுக மேம்பாடு, கடற்றொழிலாளர்களுக்குரிய தொழில்நுட்ப ஆலோசனை உட்பட அத்துறையில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றம் மற்றும் திட்டங்கள் பற்றியும் அமைச்சர் எடுத்துரைத்தார்.

மேலும், இலங்கையின் கடல்வளம் மற்றும் கடற்றொழிலாளர்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் முதன்மை நோக்கங்களில் ஒன்றாகவும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *