போதைப்பொருள் வர்த்தகம் செய்த பெண் கைது !

போதைப்பொருள் விற்பனை நிலையமாக செயற்பட்டு...

Published October 27, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

போதைப்பொருள் விற்பனை நிலையமாக செயற்பட்டு வந்த ஏறாவூர் பிரதேசத்தில் வீடு ஒன்றை பொலிஸார் நேற்று (26) முற்றுகையிட்டு பெண் ஒருவரை கைது செய்துள்ளனர்.

இதன்போது அந்த பெண்ணிடம் இருந்து 5350 மில்லி கிராம் ஜஸ் போதைப்பொருளும், போதைப்பொருள் வியாபாரம் மூலம் ஈட்டியதாக சந்தேகிக்கப்படும் 3 இலட்சத்து 61 ஆயிரம் ரூபாய் பணத்தையும் மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 56 வயதான பெண் வியாபாரியே கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சந்தேகநபரை இன்று (27) நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *