#News Alert மதுபான வரி தொடர்பில் வர்த்தமானி அறிவிப்பு.
மதுபான உற்பத்திக்கான வரி...
மதுபான உற்பத்திக்கான வரி செலுத்துவதற்கான காலக்கெடுவை இன்று (28) முதல் திருத்தி வர்த்தமானி அறிவிப்பு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயகவால் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய வர்த்தமானியில், கலால் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 22ன் கீழ், உரிமதாரர்கள் உரிய திகதியில் அல்லது அதற்கு முன் வரி செலுத்த வேண்டும் என புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வரியை உரிய திகதியிலிருந்து 30 நாட்களுக்குள் செலுத்தத் தவறினால் உரிமம் இடைநிறுத்தப்படும், மேலும் 90 நாட்களுக்கு மேல் செலுத்தாவிட்டால் அனைத்து உரிமங்களும் ரத்து செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடைநிறுத்த காலம் 6 மாதங்களாகக் குறைக்கப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், கலால் வரி ஏய்ப்பைத் தடுக்கவும், வரி வசூலை மேம்படுத்தவும் இந்த புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.