செவ்வந்திக்குக்கு உதவிய சட்டத்தரணி மீது தீவிர விசாரணை.
கணேமுல்ல சஞ்சீவ படுகொலைச் சம்பவம் தொடர்பில்...
Published October 29, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
கணேமுல்ல சஞ்சீவ படுகொலைச் சம்பவம் தொடர்பில் இஷார செவ்வந்திக்குக்கு உதவியதாக சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணியை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து மேலதிக விசாரணை செய்வதற்கு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அனுமதி கிடைத்துள்ளது.
கணேமுல்ல சஞ்சீவ படுகொலைச் சம்பவம் தொடர்பாக குறித்த பெண் சட்டத்தரணி நேற்றைய தினம் (28) இரவு கடவத்தை பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.
கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்வதற்காக வந்த இஷார செவ்வந்திக்கு, கைத்துப்பாக்கியை மறைத்து எடுத்து வருவதற்காக ‘தண்டனைச் சட்டக்கோவை’ நூலின் பிரதியொன்றை இந்தச் சட்டத்தரணியே வழங்கியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.