நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள்.
சட்டவிரோதமாக தமிழ்நாடு சென்றிருந்த இலங்கையர்...
Published October 29, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
சட்டவிரோதமாக தமிழ்நாடு சென்றிருந்த இலங்கையர் மூவர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
15 நாட்களுக்கு முன்னர் சட்டவிரோதமாக படகில் 3 பேரும் தமிழ்நாட்டுக்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இசைவேந்தன், யோகராசா, சுஜீவனை என அடையாளங்காணப்பட்டுள்ள நிலையில், சென்னை மண்ணடியில் தங்கி இருந்த இவர்களை நேற்று தனிப்படை பொலிஸார் கைது செய்தனர்.
அவர்கள் மூவரிடமும் இந்தியாவில் வந்து தங்குவதற்கான எந்த ஆவணமும் இல்லை எனவும், அவர்கள் மூன்று பேர் மீதும் இலங்கையில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இலங்கை செல்லும் விமானத்தில் மூன்று பேரும் நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.