மாங்குளம் பனிக்கன்குளம் பகுதியில் தடம்புரண்ட வாகனம்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...
Published October 29, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதியின் 227 கிலோமீற்றர் பகுதியில் (பனிக்கன்குளம்) கொழும்பிலிருந்து கிளிநொச்சி நோக்கி வந்த கயஸ் ரக வாகனம் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு வீதியை விட்டு தூக்கிவீசப்பட்டுள்ளது.
கொழும்பு நோக்கி மக்களை அழைத்துச் சென்ற குறித்த வாகனம் அவர்களை கொழும்பில் இறக்கிவிட்டு மீண்டும் கிளிநொச்சி நோக்கி திரும்பிக் கொண்டிருக்கின்ற போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது
இதன் போது இந்த வாகனத்தில் சாரதி மட்டுமே இருந்த நிலையில் தெய்வாதீனமாக சிறிய ஒரு காயத்துடன் மாத்திரம் தப்பியுள்ளார்
மேலும், மாங்குளம் பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

