மக்கள் போக்குவரத்துக்கு இடையூறான விமானப்படை தூண்கள் அகற்றம்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

Published October 31, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு பகுதியில் மக்களின் போக்குவரத்துக்கு பாரிய இடையூறாக காணப்பட்ட இலங்கை விமான படையினரால் அமைக்கப்பட்டிருந்த பாரிய தூண்கள் கரைதுறைபற்று பிரதேச சபை யினரால் இடித்து அகற்றப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கேப்பாப்புலவு கிராம அலுவலர் பிரிவின் பிலவுக்குடியிருப்பு கிராமமானது இலங்கை விமான படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்து கடந்த 2017 ஆம் ஆண்டு சுமார் ஒரு மாதமாக மக்கள் வீதியில் இறங்கி போராடி மீட்கப்பட்டிருந்தது

இந்நிலையில் இலங்கை விமானப்படையினரின் பாவனையில் இருந்தபோது இந்த கிராமத்திற்கு செல்லும் பிரதான நுழைவாயிலில் அமைக்கப்பட்ட இரண்டு பாரிய தூண்கள் மக்களது போக்குவரத்துக்கு இடையூறாக காணப்படுவதாக கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு தெரியப்படுத்தப்பட்டதை தொடர்ந்து

நேற்றைய தினம்(30) கரைதுறைப்பற்று பிரதேச சபை கனரக வாகனங்களைக் கொண்டு குறித்த போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த இரண்டு தூண்களும் அகற்றப்பட்டது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *