LATEST
பிரதம நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் – உடனடி விசாரணை கோரிக்கை!மனித உரிமைகள், நல்லாட்சி குறித்து இலங்கையிடம் EU எதிர்பார்ப்பு!நீர் திட்டத்தை மீள ஒப்படைக்கக் கோரி கிராம மக்கள் போராட்டம்!இறுதிச் சடங்கிற்கு தயாரான குடும்பம் – உயிருடன் வந்த நபர்!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் – மனுவில் வலியுறுத்தல்!குறைந்த வருமான குடும்பங்களின் பிள்ளைகளுக்கு புதிய கல்வி உதவி!உள்நாட்டு அரிசி உபரி இருக்க இறக்குமதி ஏன்? – சஜித் கேள்வி!ஓய்வு வயதை இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பதில் பிரச்சினையில்லை!பிரதம நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் – உடனடி விசாரணை கோரிக்கை!மனித உரிமைகள், நல்லாட்சி குறித்து இலங்கையிடம் EU எதிர்பார்ப்பு!நீர் திட்டத்தை மீள ஒப்படைக்கக் கோரி கிராம மக்கள் போராட்டம்!இறுதிச் சடங்கிற்கு தயாரான குடும்பம் – உயிருடன் வந்த நபர்!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் – மனுவில் வலியுறுத்தல்!குறைந்த வருமான குடும்பங்களின் பிள்ளைகளுக்கு புதிய கல்வி உதவி!உள்நாட்டு அரிசி உபரி இருக்க இறக்குமதி ஏன்? – சஜித் கேள்வி!ஓய்வு வயதை இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பதில் பிரச்சினையில்லை!
உள்ளூர்

சீதை அம்மன் ஆலயத்தில் உண்டியல்கள் திருட்டு

November 2, 2025 · Tamil Ceylon LK

வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் 6 உண்டியல்களை நேற்றிரவு உடைத்து பணம் திருடப்பட்டுள்ளது. 

நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் நேற்று இரவு ஆலயத்தின் பின் கதவு வழியாக உள்நுழைந்த திருடர்கள் 6 உண்டியலை உடைத்து அதிலிருந்த இருந்த பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர். இதில் திருடப்பட்ட மூன்று உண்டியல்களை உடைத்து பணத்தை எடுத்துக்கொண்டு ஆலயத்தின் பின்புறத்தில் நீரோட்டம் கொண்ட கங்கையில் வீசி சென்றுள்ளனர். 

ஆலயத்தில் உள்நுளைந்த திருடர்கள் தங்களது உருவங்கள் பதிவாகாமல் இருக்க ஆலயத்தில் பிரதான காரியாலயத்தில் முழு ஆலய வளாகத்தை கண்காணிக்கும் சி.சி.டி.வி. கெமராவின் முழு இணைப்பையும் துண்டித்து சி.சி.டி.வி. காணொளிகளை சேமிப்பு செய்யும் பதிவு கருவிகளையும் , பெறுமதியான கையடக்கத் தொலைபேசி ஒன்றினையும் திருடி சென்றுள்ளனர், 

தொடர்ந்து ஸ்தலத்திற்கு விரைந்த நுவரெலியா தடயவியல் பொலிஸார் கைரேகைகளை பதிவு செய்து, ஆலயத்தில் அருகில் உள்ள வர்த்தக நிலையங்களில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி கண்காணிப்பு கெமரா பதிவுகளை கொண்டும் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் . 

சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்த நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை தடவியல் பொலிஸாரின் உதவியுடன் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Stories

மேலும் ›