நவம்பர் 21 பேரணியில் பங்கேற்க மாட்டேன்- அர்ச்சுனா எம் பி
பேரினவாத அரசியலில் ஒருபோதுமே பகடைக்காயாக பயன்படுத்தப் போவதில்லை என்றும்தமிழரின் அரசியலை மட்டுமே தான் சிந்திப்பதாகவும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
Published November 2, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
பேரினவாத அரசியலில் ஒருபோதுமே பகடைக்காயாக பயன்படுத்தப் போவதில்லை என்றும்தமிழரின் அரசியலை மட்டுமே தான் சிந்திப்பதாகவும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
தன்னுடைய உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவொன்றில் இதனைக் குறிப்பிட்டார்.
எவவராயினும் தான் எதிர்வரும் 21 ஆம் திகதி அரசாங்கத்துக்கு எதிராக நடக்கவிருக்கும் பேரணியிலோ அல்லது வேறு எந்த சிங்கள கட்சியின் கூட்டங்களிலோ ஒருபோதும் பங்கேற்கப்போவதில்லைஎன்றும் குறிப்பிட்டுள்ளார்