23 மில்லியன் செலவில் வீதிகளை செப்பனிடும் பணி ஆரம்பம்
வவுனியா, புளியங்குளம் பரசங்குளம் புதிய வீட்டுத்திட்ட கிராம வீதிக்கான காப்பற் இடும் பணி
Published November 3, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
வவுனியா, புளியங்குளம் பரசங்குளம் புதிய வீட்டுத்திட்ட கிராம வீதிக்கான காப்பற் இடும் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் குறித்த பணியை இன்று ஆரம்பித்து வைத்திருந்தார்.
கிராமப்புற வீதிகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் 23.03 மிலலியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 810 மீற்றர் தூரத்திற்கான வீதியானது காப்பற் இடப்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருத்தனர்.
