தீர்மானத்தை மாற்றாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயார்
பாடசாலை நேரத்தை அரை மணிநேரமாக அதிகரிக்கும் தீர்மானத்தை இரத்து செய்ய
Published November 4, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
பாடசாலை நேரத்தை அரை மணிநேரமாக அதிகரிக்கும் தீர்மானத்தை இரத்து செய்ய அரசாங்கத்திற்கு எதிர்வரும் 7ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்குவதாக ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டணி அறிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த தீர்மானத்தை மாற்றாவிட்டால், டிசம்பர் முதல் வாரத்தில் நாடளாவிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாகவும் ஆசிரியர் அதிபர தொழிற்சங்க கூட்டணி எச்சரிக்கை விடுத்துள்ளது.