சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை கடந்த மாதம் அதிகரிப்பு

கடந்த ஒக்டோபர் மாதத்தில் 165,193 சுற்றுலாப் பயணிகள் இலங்கை நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக

Published November 4, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

கடந்த ஒக்டோபர் மாதத்தில் 165,193 சுற்றுலாப் பயணிகள் இலங்கை நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இது 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 21.5 சதவீதம் அதிகரிப்பாகும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இந்தியாவில் இருந்து 48,113 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர்.

ஒக்டோபர் மாதத்தில் பிரித்தானியாவில் இருந்து 12,934 பேரும், ரஷ்யாவிலிருந்து 11,496 பேரும், சீனாவிலிருந்து 10,864 பேரும், ஜெர்மனியில் இருந்து 9,753 பேரும் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதனிடையே தற்போது வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய புள்ளிவிபரத்துடன் 2025ஆம் ஆண்டில் இலங்கை வந்த மொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,890,687 ஆக அதிகரித்துள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *