வாகன இறக்குமதியில் மீண்டும் சிக்கல்

எதிர்வரும் காலங்களில் இலங்கையின் வாகன இறக்குமதியில் சிக்கல் ஏற்படலாம்

Published November 7, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

எதிர்வரும் காலங்களில் இலங்கையின் வாகன இறக்குமதியில் சிக்கல் ஏற்படலாம் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதியால் இலங்கை ரூபாவின் பெறுமதிக்கு தாக்கம் ஏற்பட கூடும் என நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.

குறித்த விடயத்தை அரசாங்க நிதி பற்றிய குழுவுடன் நடைபெற்ற கூட்டத்தின் போது தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த மத்திய வங்கி ஆளுநர், இனி வரும் காலங்களில் தொடர்ச்சியாக வாகனங்கள் இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்படலாம். வாகன இறக்குமதியாளர்கள் தொடர்ச்சியாக வாகனங்கள் இறக்குமதி செய்ய தீர்மானிக்கலாம்,.

அதனால் இலங்கை ரூபாவின் பெறுமதிக்கு பெரும் தாக்கம் ஏற்படுவதோடு அரசாங்கத்தின் நடைமுறை கணக்கில் பாரிய பற்றாக்குறையும் உருவாக்கப்படும்.

பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து சுயமாக மீட்சி பெறும் இலங்கை போன்ற நாட்டுக்கு இவ்வாறான நிலைமை ஆபத்தானதாகும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாகன இறக்குமதியால் டொலர் பெருமளவு வெளியேற்றப்படுகின்றன.இலங்கையில் வெளியேற்றப்படும் டொலரை விட உள்வரும் டொலர் பாரிய வேறுப்பாடாகும்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *