கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு தொடர்பில் மூவர் கைது

கொழும்பு - கொட்டாஞ்சேனை, 16 ஆம் ஒழுங்கை பகுதியில் கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற

Published November 11, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

கொழும்பு – கொட்டாஞ்சேனை, 16 ஆம் ஒழுங்கை பகுதியில் கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உள்ளிட்ட மேலும் 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

துப்பாக்கித்தாரிக்கு தங்குமிட வசதி மற்றும் வாகன உதவிகளை வழங்கிய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்களிடம் இருந்து ஒரு முச்சக்கரவண்டியும், 2 கையடக்க தொலைபேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைதானவர்கள் கொழும்பு 13 மற்றும் கிராண்ட்பாஸ் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு முன்னெடுத்து வருகின்றது.

முன்னதாக குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்தில் கடந்த 9 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *