ஜனாதிபதியின் கையொப்பத்துடனான போலி ஆவணத்தை தயாரித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் எதிர்வரும் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்ட போது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குருநாகல், யந்தம்பலாவ பகுதியை சேர்ந்த 37 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அரச வங்கியொன்றில் பணிநீக்கம் செய்யப்பட்ட குருநாகல், யந்தம்பலாவ பகுதியை சேர்ந்த 37 வயதான பணியாளர் ஒருவர் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக , ஜனாதிபதியின் கையொப்பம் மற்றும் கடிதத் தலைப்புகளை பயன்படுத்தி சந்தேகநபரால் தயாரிக்கப்பட்ட கடிதம் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.