சுற்றுலா செல்பி குறித்து பொலிஸார் எச்சரிக்கை
சுற்றுலா, யாத்திரை உள்ளிட்ட பயணங்களின் போது தாம் இருக்கும் இடத்தை தெரிவிக்கும்
சுற்றுலா, யாத்திரை உள்ளிட்ட பயணங்களின் போது தாம் இருக்கும் இடத்தை தெரிவிக்கும் வகையில் புகைப்படங்களை எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிடுவதை தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
தம்மை பின்தொடரும் கொள்ளையர்கள் இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வீடு, சொத்துக்களை கொள்ளையிடும் சந்தர்ப்பங்கள் அதிகமென உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ.வுட்லர் தெரிவித்துள்ளார்.
கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவோர் இது போன்ற சந்தர்ப்பங்கள் குறித்து அவதானத்துடன் இருப்பதுடன், புகைப்படங்கள் ஊடாக அவர்களுக்கு போதுமான தகவல்கள் கிடைக்கப்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் சுற்றுலாப் பயணங்களின் போது பயன்படுத்தப்படும் வாகனங்கள், வாகன சாரதிகள் தொடர்பிலும் உரிய அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.