அரச செலவுகள் – அதிரடி பணிப்புரை விடுத்தார் ஜனாதிபதி கோட்டா!

0

ஜூலை முதலாம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அரச செலவுகளுக்கு ஒன்றிணைந்த நிதியத்திலிருந்து பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களுக்கு அமைய இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் 03 மாதங்களுக்கு அமைச்சுகள், திணைக்களங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கான சம்பளம் உள்ளிட்ட ஏனைய செலவுகளுக்கான நிதியை ஒன்றிணைந்த நிதியத்திலிருந்து பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளமையாலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.