கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு : மேலும் 2 பேர் கைது

கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் அண்மையில் ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவத்திற்கு

Published November 14, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் அண்மையில் ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் மேலும் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினரால் நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், இந்தக் குற்றத்தைச் செய்ய துப்பாக்கிதாரி வந்த காரின் சாரதியாக இருந்தவர் என்றும், சந்தேகநபரான பெண், இந்தக் குற்றத்தைச் செய்ய சந்தேகநபர்களுக்குத் தங்குமிட வசதிகளை வழங்கியவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் சந்தேகநபருக்கு 27 வயது எனவும், அவர் கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், சந்தேகநபரான பெண்ணுக்கு 32 வயது எனவும், அவர் மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *