மதுபோதையில் கடமையில் ஈடுபட்டிருந்த ரயில் கடவை பாதுகாப்பு ஊழியர் கைது
மதுபோதையில் கடமையில் ஈடுபட்டிருந்த ரயில் கடவை பாதுகாப்பு ஊழியர் ஒருவர் ரயில்வே
Published November 14, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
மதுபோதையில் கடமையில் ஈடுபட்டிருந்த ரயில் கடவை பாதுகாப்பு ஊழியர் ஒருவர் ரயில்வே திணைக்கள பாதுகாப்பு அதிகாரிகளால் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ரயில்வே திணைக்கள பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேகநபர் கொள்ளுப்பிட்டி – உத்தராகன்த பகுதியில் உள்ள ரயில் கடவைக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் கொழும்பு கொம்பனி வீதி ரயில் நிலையத்தில் கடமையாற்றும் ஊழியர் ஆவார்.
இது தொடர்பில் ரயில்வே திணைக்கள பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.