பெரிய வெங்காய கொள்முதல் திட்டம் ஆரம்பம்
நாட்டில் தற்போது பாரிய வெங்காயக் கொள்முதல் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக விவசாய அமைச்சின் (Ministry of Agriculture) பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன (Namal Karunarathna) தெரிவித்துள்ளார். அதன்படி,
Published November 15, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நாட்டில் தற்போது பாரிய வெங்காயக் கொள்முதல் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக விவசாய அமைச்சின் (Ministry of Agriculture) பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன (Namal Karunarathna) தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 130 ரூபாய் என்ற விலை அடிப்படையில் கொள்முதல் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இந்தக் கொள்முதல் நடவடிக்கைகள் சதொச, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மற்றும் தெரிவு செய்யப்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.