டின் மீன் வகைகளுக்கான விலைக்கட்டுப்பாடு
டின் மீன் வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து
Published November 15, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
டின் மீன் வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து இன்று (15) முதல் அமுலுக்கு வரும் வகையில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.
இதன்படி 425 கிராம் நிறையுடைய டூனா (Tuna) டின் மீனின் அதிகபட்ச விலை 380 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 425 கிராம் நிறையுடைய மெக்கரல் 480 ரூபாவாகவும், 425 கிராம் நிறையுடைய ஜெக் மெக்கரல் 560 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.