வெளிநாட்டு சுற்றுலா பெண்ணுக்கு பாலியல் தொல்லை செய்த நபர் கைது
திருக்கோவில் பகுதியில் வெளிநாட்டு சுற்றுலாப் பெண் ஒருவரிடம் பாலியல் தொல்லை
திருக்கோவில் பகுதியில் வெளிநாட்டு சுற்றுலாப் பெண் ஒருவரிடம் பாலியல் தொல்லை செய்ததாகக் கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய 23 வயதான திருமணமான இளைஞர் ஒருவரை பொலிஸார் களவாஞ்சிக்குடி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
இலங்கைக்கு வந்திருந்த நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், அக்டோபர் 25ஆம் திகதி சுற்றுலா மேற்கொண்டபோது ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்டதாக இலங்கை சுற்றுலா பொலிஸிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.
மேலும், சம்பவத்தின் காட்சியையும் அவர் சமூக ஊடகங்களில் பதிவேற்றியதையடுத்து இது பெரும் கவனம் பெற்றது.
சுற்றுலா பிரிவு பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில், சம்பந்தப்பட்ட பெண் அறுகம்பையிலிருந்து பாசிக்குடாவுக்குச் சென்றபோது திருக்கோவில் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.