ரணிலின் கைது! இந்தியாவில் இருந்து அநுர அரசாங்கத்திற்கு வந்த அறிவுரை..

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது கவலையளிப்பதாக இந்திய காங்கிரஸ் கட்சியின் எம்.பி சசி தரூர் தெரிவித்துள்ளார். இது குறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் வருத்தம்

Published August 24, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது கவலையளிப்பதாக இந்திய காங்கிரஸ் கட்சியின் எம்.பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையினுடைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அற்பமான குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது மிகவும் வருத்தத்திற்குரிய விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய இலங்கை அரசாங்கம் பழிவாங்கும் அரசியலைக் கைவிட்டு அவரைக் கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்றும் சசி தரூர் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உலகம் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *