கடும் மின்னல் குறித்து எச்சரிக்கை!

ஊவா, தென், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் கடும் மின்னல் தாக்கத்துடன் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம்

Published November 19, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

ஊவா, தென், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் கடும் மின்னல் தாக்கத்துடன் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த எச்சரிக்கை இன்று(19) பிற்பகல் 11.30 மணி முதல் அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.