“இறுகப்பற்று” தயாரிப்பு நிறுவனத்துடன் இணையும் கல்யாணி பிரியதர்ஷன்

பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் ஏழாவது திரைப்படத்தின் நாயகியாக

Published November 20, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் ஏழாவது திரைப்படத்தின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் ‘மாயா” ‘மான்ஸ்டர்”,’டாணாக்காரன்”,’இறுகப்பற்று”, ‘பிளாக்” என தொடர்ச்சியாக 6 வெற்றிப்படங்களுக்குப் பிறகு, பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் ஏழாவது திரைப்படத்தில் கதையின் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.

தேவதர்ஷினி, ‘நான் மகான் அல்ல” புகழ் வினோத் கிஷன் ஆகியோர் நடிக்கும் இப்படத்தில் மேலும் சில முன்னணி நட்சத்திரங்களும் நடிக்க உள்ளனர்.

அறிமுக இயக்குநர் திரவியம். எஸ்.என் இயக்கும் இப்படத்தின் திரைக்கதையை திரவியமுடன் இணைந்து பிரவீன் பாஸ்கர், ஸ்ரீ குமார் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.

இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்கிறார். ஆரல் ஏ.தங்கம் படத்தொகுப்பு செய்ய, தயாரிப்பு வடிவமைப்பாளராக மாயபாண்டி பணியாற்றுகிறார். ஆடை வடிவமைப்பாளராக இனஸ் ஃபர்ஹான் மற்றும் ஷேர் அலி பணியாற்றுகிறார்கள்.

பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, பி.கோபிநாத், தங்கபிரபாகரன்.ஆர் ஆகியோர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது.

சென்னையில் படப்பிடிப்பு தொடங்கியிருக்கும் நிலையில் இப்படத்தின் அதிகாரப்பூர்வமாக விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers பல்சுவை and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *